ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் நாளில் 10 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை நேற்று தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் 523 பள்ளிகளில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 260 மாணவ, மாணவிகள் உள்ளனர். நேற்று முதல் கட்டமாக 92 பள்ளிகளில், 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. மாணவ , மாணவிகள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்து 915 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture