ஈரோடு மாவட்டத்தில் நாளை 207 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

ஈரோடு மாவட்டத்தில் நாளை 207 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு
X
பைல் படம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை 207 இடங்களில் 11,200 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார், வருவாய்த் துறையினர் மற்றும் பிற துறையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். உயிர் இழப்பும் அதிகரித்தது. இதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். நீண்ட வரிசையில் காத்து நின்று டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போட்டு சென்றனர். கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் அந்தந்த வாக்குச்சாவடியில் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, நம்பியூர், சத்தியமங்கலம், தாளவாடி, மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் 207 இடங்களில் 11,200 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!