ஈரோடு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி
X
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

மாவட்டம் முழுவதும் பல்வேறு மெகா முகாம்களை அறிவித்து 18 வயதான அனைவரும் தங்கள் பகுதியிலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகரில் 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே வந்து தடுப்பூசி செலுத்துக் கொள்ளும் நடைமுறையை தற்போது மாவட்ட நிர்வாகம் அமலாக்கியுள்ளது.

இந்நிலையில், ஈரோடு பேருந்து நிலையத்திலேயே வாரத்தில் 2 நாட்கள் தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவசரமாக பஸ்களை பிடிக்க வரும் பயணிகள் அவர்களுடைய ஆதார் அட்டையை காட்டி சுலபமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.ஒவ்வொரு வாரமும் வியாழன், ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் பேருந்து நிலைய வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. இதற்காக 3 செவிலியர்கள், 2 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றுவரும் பேருந்து நிலைய தடுப்பூசி முகாமில் முதல் நாள் சுமார் 50 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். ஊசி போட்டுக்கொள்ளும் பேருந்து பயணிகள் இதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் எண்ணிக்கை நூற்றுக்குமேல் அதிகரித்துள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil