ஈரோடு மாவட்டத்தில் 21,807 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 21,807 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

கோப்பு படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 35-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 21,807 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 1,597 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் ஆர்வமாக வந்து‌ கொரோனா‌ தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இதில் 858 பேருக்கு முதல் தவணையும், 8,948 பேருக்கு 2-ம் தவணையும், 12,001 பேருக்கு 3-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரேநாளில் 21ஆயிரத்து 807 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai marketing future