ஈரோட்டில் இன்று 475 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோட்டில் இன்று  475 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 475 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசியை 82 சதவீதம் பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 49 சதவீதம் பேரும் செலுத்தி கொண்டு உள்ளனர். இன்னும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டியுள்ளது.இந்நிலையில் இன்று 14-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் 475 மையங்களில் தடுப்பூசி முகாம் தொடங்கியது. 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த பணியில் 1,900 பணியாளர்கள், 68 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!