/* */

ஈரோடு மாவட்டத்தில் 504 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 504 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 504 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

கோப்பு படம்

தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) 22வது மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-வது தவணை தடுப்பூசிகளும், 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்பட 504 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 2016 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். 66 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு அதாவது 2007-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னதாக பிறந்தவர்களுக்கும் கோவாக்சின் வகை தடுப்பூசிகள் இந்த முகாமில் செலுத்தப்பட உள்ளன.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களில் ஏற்கனவே இரு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் பூர்த்தி அடைந்தவர்கள் தகுதியுடையவர்களாவார்கள். முன்பு 2 தவணை தடுப்பூசிகளில் எந்த வகை தடுப்பூசி (கோவிசீல்டு மற்றும் கோவேக்சின்) செலுத்திக்கொண்டார்களோ அந்த வகை தடுப்பூசியே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தப்படும்.

வாரந்தோறும் வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்களில் இலவசமாக செலுத்தப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல் தெரிவித்தள்ளார்.

Updated On: 10 Feb 2022 5:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...