ஈரோடு மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை 496 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை 496 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் வரும் சனிக்கிழமையன்று, 496 மையங்களில் 21வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் 1.50 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் இதுவரை 20 கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) 21வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 496 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 1984 பணியளர்கள், 66 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

18 வயது நிரம்பிய இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.இதேபோல் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கும் நாளை மறுநாள் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் 60 வயது உடைய, இணை நோயுடைய முதியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story