ஈரோடு மாவட்டத்தில் நாளை 291 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 291 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஆறு கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 7வது கட்டமாக மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) 291 இடங்களில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட மொத்தம் 40 இடங்களில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

Tags

Next Story
ai in future education