ஈரோடு மாவட்டத்தில் நாளை 266 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 266 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை 43 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (21.10.2021) 266 இடங்களில் 43 ஆயிரத்து 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஐந்து கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் 6ம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் வரும் வெள்ளி மற்றும் சனி என இரு நாட்கள் நடைபெறவுள்ளன.இதில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நாளை 266 இடங்களில் 43 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 26 இடங்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 650 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி