கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 24 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 24 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்

Free Vaccination Camp - கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நாளை (24ம் தேதி) 24 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

Free Vaccination Camp - தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை ஒழிக்க நாளை (24-ந்தேதி) தமிழகம் தழுவிய அளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறதுஅதன்படி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில், 30 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களின் வசதிக்காக நாளை 24 மையங்களில், தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. நகராட்சியில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என கீழ்க்கண்டவாறு நடக்கிறது.

காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் :- ஆரம்ப சுகாதார நிலையம் வாய்க்கால்ரோடு, ஜெயராம் அங்கன்வாடி மையம் ஜெயராம்வீதி, எல்.ஐ.ஜி காலணி வாய்க்கால் ரோடு, வேங்கம்மையார் மேல்நிலைப் பள்ளி சீதாலட்சுமிபுரம், மொடச்சூர் மேல்நிலைப் பள்ளி காட்டு வளவுவீதி, சி.ஐ.ஜி மிஷன் செங்கோட்டையன் காலணி,விவேகானந்தர் அங்கன்வாடி மையம் விவேகானந்தர் வீதி, டி.எஸ். சாரதா மேல்நிலைப் பள்ளி கிருஷ்ணன் வீதி, அங்கன்வாடி மையம் கமலா ரைஸ்மில் வீதி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சரவணா தியேட்டர் ரோடு, வைரவிழா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கச்சேரி மேடு, சிலேட்டர் ஹவுஸ் சமுதாய நலக்கூடம் சிலேட்டர் ஹவுஸ் வீதி

மதியம் 1 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்:-ராமநாதன் வீதி அங்கன் வாடி மையம், முத்துமாரியம்மன் கோவில் பிள்ளையார் கோவில் வீதி சமுதாய நலக் கூடம் ஸ்ரீராம புரம், வேங்கம்மையர் தொடக்கப்பள்ளி பச்சமலை ரோடு,மொடச்சூர் அங்கன்வாடி மையம் ரைஸ்மில் வீதி,சங்கரன் வீதி, விவேகானந்தர் சமுதாய நலக்கூடம் விவேகனந்தர் வீதி,4.5.6 ,கருப்பராயன் கோவில் வீதி,ஜி.சி.ஆர் நகர் செங்கோடப்பா துவக்கப் பள்ளி பாரியூர் ரோடு, பேருந்து நிலையம் எஸ்.டி.என் காலணி, குப்தா லே அவுட் நாகர்பாளையம் ரோடு, அங்கன் வாடி மையம் . நஞ்சப்பா வீதி.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!