ஈரோடு மாவட்டத்தில் இன்று 304 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 304 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் 12-18 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு 304 பள்ளிகளில் இன்று (வியாழக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் (28ம் தேதி) இன்று 20,103 பள்ளி மாணவர்களுக்கு 304 பள்ளிகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. இதில், 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய பள்ளி மாணவர்களுக்கும், இதுவரை தடுப்பூசி செலுத்தப்படாத மாணவர்களுக்கும் அந்தந்தப் பள்ளிகளில் பொது சுகாதார துறை மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுடையவர்களும், 15 முதல் 18 வயதுடையவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்தி, தங்கள் இன்னுயிரை பாதுகாப்பதுடன், கொரோனா 4ம் அலை பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!