/* */

ஈரோடு மாவட்டத்தில் 27.82 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 27.82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 27.82 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 5 ஆயிரத்து 936 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். இது 88.77 சதவீதமாகும்.

இதேபோல், கொரோனா 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 11 லட்சத்து 76 ஆயிரத்து 538 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 65.03 சதவீதமாகும். முதல் மற்றும் இரண்டாம் தவணைத் தடுப்பூசியை மொத்தம் இதுவரை 27 லட்சத்து 82 ஆயிரத்து 474 பேர் செலுத்திக் கொண்டு உள்ளனர். மாவட்டத்தில் இன்னும் முதல் தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 3 ஆயிரத்து 164 பேர் செலுத்தி கொள்ளவில்லை. அதைப்போல் இரண்டாம் தவணை தடுப்பூசியை இன்னும் 2 லட்சத்து 98 ஆயிரத்து 382 பேர் செலுத்தி கொள்ளவில்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 18 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை