ஈரோடு மாவட்டத்தில் ஒரேநாளில் 777 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

ஈரோடு மாவட்டத்தில் ஒரேநாளில் 777 பேருக்கு கொரோனா பெருந்தொற்று
X
ஈரோடு மாவட்டத்தில், இன்று ஒரேநாளில் 777 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் கொரோனா 3-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

அதேசமயம் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று 4 ஆயிரத்து 202 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 613 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று ஒரேநாளில் 777 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 283 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 201 பேர் குணமடைந்தார்கள். இன்று மட்டும் 237 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 3 ஆயிரத்து 366 சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி 75 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை மொத்தம் 716 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture