ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு
X
By - S.Gokulkrishnan, Reporter |11 Jan 2022 7:45 PM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று, 3 மாதத்துக்கு பின்பு நேற்று 123 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு 242 ஆக அதிகரித்து உள்ளது. நாளுக்கு நாள் தொற்று வேகமெடுத்து வருவதால் சுகாதாரத்துறையினர் கவலை அடைந்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரத்து 720 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 232 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 776 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 712 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu