ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 98 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி.
பைல் படம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 372 பேருக்கு பரிசோதனை செய்ததில் 134 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 52 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 376 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 554 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கடந்த 11ஆம் தேதி 71 வயது மூதாட்டி ஒருவரும், நேற்று 70 வயது முதியவர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை 732 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது தொற்று உள்ள ஆயிரத்து 766 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu