ஈரோடு மாவட்டத்தில் 1000-ஐ கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று 2-வது அலை, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதிகமானவர்கள் உயிரிழந்தனர். தற்போது 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தாலும் தினமும் சுமார் ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.நேற்று 4 ஆயிரத்து 206 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 973 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், இன்று ஒரே நாளில் 1,066 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 82 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 852 பேர் குணமடைந்து உள்ளனர். இன்று மட்டும் 491 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. தற்போது 5 ஆயிரத்து 509 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 721 பேர் பலியாகி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu