அந்தியூர் அடுத்த பர்கூர் காவல் நிலையத்தில் 4 போலீசாருக்கு கொரோனா

அந்தியூர் அடுத்த பர்கூர் காவல் நிலையத்தில் 4 போலீசாருக்கு கொரோனா
X

பைல் படம்

அந்தியூர் அடுத்த பர்கூர் போலீஸ் நிலையத்தில் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி முதல் தினசரி பாதிப்பு தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

முதலில் மாநகர பகுதியில் வேகமாக பரவிய கொரோனா, தற்போது கிராமப்புற பகுதியில் வேகமாக பரவி வருகிறது. இதேபோல் முன் களப்பணியாளர்களான போலீசார் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் பெரும்பாலானவர்கள் லேசான அறிகுறி என்பதால் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். இதுவரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 164 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 4 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. போலீஸ் நிலையத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் வெளியே நின்று மனு கொடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags

Next Story
வாட்சப்புல கால் ரெகார்ட் பண்ணிக்கலாமா , வாங்க எப்புடின்னு பாக்கலாம்