ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.80 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.80 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.80 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2ம் அலையின்போது அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 1,700 வரை பதிவானது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை உடனுக்குடன் கண்டறியும் வகையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பு அதிகரித்ததையடுத்து தினமும் 10 ஆயிரம் வரையிலான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பானது நேற்று பூஜ்ஜியம் என்ற நிலைமையை அடைந்தது. இருப்பினும், மாவட்டத்தில் தற்போது தினமும் ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 26 லட்சத்து 80 ஆயிரத்து 984 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself