ஈரோடு மாவட்டத்தில் 800 மையங்களில் நடந்த முகாம்களில் 50,000 பேருக்கு தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 800 மையங்களில் நடந்த முகாம்களில் 50,000 பேருக்கு தடுப்பூசி
X
ஈரோடு மாவட்டத்தில் 10-வது கட்டமாக 800 மையங்களில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவுவதை தடுக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் அனைவருக்கும் தடுப்பூசி எனும் இலக்குடன், இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாள்களாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 800 மையங்களில், சனி (20.11.2021) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (21.11.2021) இரண்டு நாட்கள் 10-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் காலை 7 மணி முதல், இரவு 7 மணி வரை, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 50 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!