அந்தியூர் காவல் நிலையத்தில் போலீசாருக்கு கொரோனா தொற்று

அந்தியூர் காவல் நிலையத்தில் போலீசாருக்கு கொரோனா தொற்று
X
அந்தியூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் ஒருவருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று, அந்தியூர் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்களுக்கு அந்தியூர் சுகாதாரத்துறையினர் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அந்தியூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சளி, இருமலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உள்ளதை மாவட்ட சுகாதாரத்துறை உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளான காவலர், தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரோடு தொடர்பில் இருந்த காவலர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story