ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக தினசரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக தினசரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக தினசரியாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 30ம் தேதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்த நிலையில், 16 நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் இன்று 3வது நாட்களாக தினசரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.

இதனையடுத்து, மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 676 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 938 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!