ஈரோடு மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இருவர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இருவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா பாதிப்பு; இருவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 76 வயது மூதாட்டி ஒருவரும், 45 வயது ஆண் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து 69 பேர் வீடு திரும்பியுள்ளனார்.

மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,923 பேர், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,05,551 பேர், தற்போது 670 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 702 ஆக உள்ளது.

நேற்று 8,190 பேருக்கு பரிசோதனை செய்ததில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.7% ஆக உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture