ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கல்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கல்
X

கோப்பு படம்

Tamil Nadu Corona Cases Today - ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Nadu Corona Cases Today - ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்தது. இதனால் தினசரி பாதிப்பு பூஜ்ஜியத்தில் இருந்து வந்தது. இருப்பினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 685 ஆக உயர்ந்தது. இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 9 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story