ஈரோட்டில் 2 இன்ஸ்பெக்டர் உட்பட்ட 6 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு
கோப்பு படம்
ஈரோடு மாநகர்
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் போலீசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்டருக்கு, கடந்த சில தினங்களாக சளி தொந்தரவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சூரம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு சளி காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல், வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டருக்கு திடீரென சளி தொந்தரவு ஏற்பட்டது. இதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சத்தியமங்கலம் , பெருந்துறை
கடம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப் -இன்ஸ்பெக்டர், முதல்நிலை காவலர், பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் ஏட்டு, என 3 பேருக்கும் சளி காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவர்கள் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu