ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 397 பேருக்கு கொரோன தொற்று: இருவர் பலி.

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 397 பேருக்கு கொரோன தொற்று: இருவர் பலி.
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டத்தில் 1,103 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 976 பேருக்கு பரிசோதனை செய்ததில் 405 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக 397 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30ஆயிரத்து 651 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,023 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 474 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கடந்த 4ஆம் தேதி 90 வயது மூதாட்டி ஒருவரும், நேற்று 65 வயது முதியவர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 729 பேர் பலியாகியுள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 6 ஆயிரத்து 448 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!