பவானியில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

பவானியில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
X

கொரோனா விழிப்புணர்வு ஓட்டத்தைத் தொடக்கி வைக்கும் பவானி காவல் உதவி ஆய்வாளர் சரவணன், பள்ளித் தாளாளர் எம்.சின்னசாமி உள்ளிட்டோர்.

பவானியில் மாணவ, மாணவியர் பங்கேற்ற கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள சேவாக்கவுண்டனூர் தி ஆப்டிமஸ் பப்ளிக் பள்ளி சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த ஓட்டத்துக்கு பள்ளித் தாளாளர் எம்.சின்னசாமி தலைமை தாங்கினார். தி பெஸ்ட் கல்வியியல் கல்லூரி நிர்வாகி எஸ்.பாலமுருகன் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேஷ் வரவேற்றார். பவானி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.பவானி கூடுதுறை அருகே தொடங்கிய இந்த ஓட்டம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று 12 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. முடிவில், கவுந்தப்பாடி காவல் ஆய்வாளர் சுபாஷ், சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!