அந்தியூர் அருகே மின்கம்பி உரசியதில் டிராக்டரில் இருந்த சோளத்தட்டு தீப்பிடிப்பு

அந்தியூர் அருகே மின்கம்பி உரசியதில் டிராக்டரில் இருந்த சோளத்தட்டு தீப்பிடிப்பு
X

 சோளத்தட்டில் பிடித்த தீயை அணைக்கும் தீயணைப்புப்படையினர்.

அந்தியூர் அருகே டிராக்டரில் சோளத்தட்டு ஏற்றிக்கொண்டு வந்த போது மின்கம்பி உரசியதில் சுமார் 1 ஏக்கர் அளவுள்ள சோளத்தட்டு போர் எரிந்து சேதமானது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ரெட்டிபாளையம் அருகே உள்ள மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவர் தனது தோட்டத்தில் இருந்து சோளத்தட்டுகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது சோளத்தட்டில் மின்கம்பி உரசி தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து உடனடியாக அந்தியூர் தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயிணை அணைத்தனர். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai tools for education