அந்தியூர் தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

அந்தியூர் தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
X

அந்தியூர் தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் குமார் பட்டறையில், தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் அந்தியூர் ஒன்றிய பொருளாளர் துரைசாமி வரவேற்றார்.ஒருங்கிணைந்த மாவட்ட தொழிற்சங்க தலைவர் சிவகுமார், அந்தியூர் நகர பொருளாளர் விஜயகுமார், அவைத்தலைவர் ஜே பி ரமேஷ் மாவட்ட நிர்வாகி இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அந்தியூர் ஒன்றிய செயலாளர் ஈ. சுதாகர் தலைமை வகித்துப் பேசினார்.

மாவட்டச் செயலாளர் பிகே பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய கிளை உருவாக்குதல், கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.மேலும் எதிர்வரும் ஜூன் மாதம் அந்தியூர் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.அத்தாணி நகரச் செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.இக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future