/* */

அந்தியூர்: மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

அந்தியூரில் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர்:  மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
X

அந்தியூரில் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ஆலோசனைக் கூட்டத்தின் போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சி அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் எஸ் ஆர் பழனிச்சாமி வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் அந்தியூர் பி. பிரபு, மாநில ஒருங்கிணைப்பாளர் பெரிய கருப்பன், மாநில பொருளாளர் இளங்கோவன், மாவட்டச் செயலாளர் குமார் என்கிற பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஆரூர் எம். ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி அமைப்பாளர் தெக்குப்பட்டி ஜெகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், முடி திருத்துவோர் நல சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், புதிதாக தொடங்கப்பட்ட அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழக கட்சிக் கிளைகளை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் பச்சியப்பன் நன்றி கூறினார். இதில், அந்தியூர் ஒன்றிய செயலாளர் எஸ். ராமச்சந்திரன், பி. மேட்டுப்பாளையம் கிளைச் செயலாளர் சக்திவேல், அந்தியூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மகாதேவி, அந்தியூர் மகளிர் அணி நகர செயலாளர் ஆர். ஸ்ரீதேவி, நகரச் செயலாளர் மண்டலிங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 2 March 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?