அந்தியூரில் வேட்பாளர்களுக்கான விதிமுறை குறித்த ஆலோசனை கூட்டம்

அந்தியூரில் வேட்பாளர்களுக்கான விதிமுறை குறித்த ஆலோசனை கூட்டம்
X
 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட வேட்பாளர்கள்.
வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தேர்தலில், மொத்தமுள்ள 18 வார்டுகளில் 66 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில், அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் சித்ரா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேர்தலில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றியும் விதிமுறைகள் குறித்தும் வேட்பாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் சின்னம் சம்பந்தமான பரிசு வழங்குவது, மத வழிபாட்டுத் தலங்களில் வாக்கு சேகரித்தல் ஆகிய நடவடிக்கைகளில் வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!