சத்தியமங்கலம் அருகே கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சத்தியமங்கலம் அருகே கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X
சத்தியமங்கலம் அருகே மனைவி பிரிந்து சென்றதால், கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வரதம்பாளையம், தோப்பூர் காலனியை சேர்ந்தவர் மருதாச்சலம். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகள்கள். மருதாசலத்துக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் வீட்டில் அடிக்கடி கணவன்-மனைவிக் கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு தகராறு ஏற்படவே, கோபமடைந்த சத்யா, கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் மன வேதனையில் மருதாச்சலம், நேற்று வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story