கட்டிட தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகையை திருடியவர் கைது

கட்டிட தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகையை திருடியவர் கைது
X

கைது செய்யப்பட்ட தர்மதுரை.

சிவகிரி அருகே கட்டிட தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த வேலாங்காடு, அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கட்டிட தொழிலாளி. நேற்று இவரின் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை மற்றும் 13 ஆயிரம் ரொக்கம் திருடு போனது. இதுகுறித்து சிவகிரி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று மோளபாளையம் நால்ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, தர்மதுரை என்பவரிடம் சந்தோகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மதுரை நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, தர்மதுரையை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தினை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai marketing future