ஈரோடு: மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்; காங்கிரஸ் கட்சி பிரமுகர் எஸ்பி அலுவலகத்தில் புகார்!

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறி காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஈரோட்டை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான் அந்தியூரை சேர்ந்த ஒருவருடன் இணைந்து இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வரவு-செலவுகளை முடித்துவிட்டு பிரிந்து விட்டோம்.
இந்தநிலையில் அவர் வாங் கிய கடனை நான் செலுத்த வேண்டும் என்று சிலர் என்னை தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். எனது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டுகின்றனர்.
மேலும், நான் அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பி உள்ளனர். எனவே, என்னை பற்றி அவதூறு பரப்புபவர்களின் சமூக வலைத்தளத்தை முடக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu