அந்தியூர் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற சிலம்பாட்ட வீரர்கள்

அந்தியூர் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற  சிலம்பாட்ட வீரர்கள்
X

எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் வாழ்த்து பெற்ற சிலம்பாட்ட வீரர்கள்

சிலம்பாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பச்சாம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் திகம்பரன் மற்றும் தசாதரன் சிலம்பாட்ட வீரர்களான இருவரும் கடந்த 28ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் திகம்பரன் தங்கப் பதக்கமும், தசாதரன் வெள்ளிப் பதக்கமும் வென்று வீடு திரும்பினர். மேலும் இவர்கள் இருவரும் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலத்தை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது சிலம்பாட்ட பயிற்சி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!