சத்தியமங்கலம் காமதேனு கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்

சத்தியமங்கலம் காமதேனு கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்
X

கல்லூரி வளாகத்தில் சண்டை போடும் மாணவர்கள்.

சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அத்தாணி செல்லும் சாலையில் காமதேனு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி உணவகத்தில் 2 மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஒரு சில மாணவர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. கேங் வார் போல் மாணவர்கள் அடித்துக் கொள்ளும் காட்சி பரப்பும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறும் போது, உணவு இடைவேளையில் 2 மாணவர்களுக்கு ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறியது. இது குறித்து 2 மாணவர்கள் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!