சத்தியமங்கலம் அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி

சத்தியமங்கலம் அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி
X

கவிழ்ந்து விழுந்த கலவை எந்திரம்.

வடிகால் பணியின் போது, கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த நஞ்சப்பகவுண்டன்புதூர் பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கான்க்ரீட் கலவை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சத்தியமங்கலம் - நெகமம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், நிலைதடுமாறி சாலையின் நடுவே தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கருப்பசாமி, பவானிசாகர் பகுதியை சேர்ந்த முத்தப்பன், கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் இந்த விபத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!