ஈரோட்டில் அரசு மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
அரசு மதுக்கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக கூறி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலி மது பாட்டிலுடன் புகார் மது அளித்த தங்கவேல்.
ஈரோட்டில் அரசு மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக கூறி, ஆட்சியர் அலுவலகத்தில் மது பாட்டிலுடன் வந்து புகார் மனு அளித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு வெட்டுக்காட்டுவலசு மடிகார்காலனி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் அவ்வபோது மது அருந்தும் பழக்கம் இருப்பதால் வீட்டின் அருகே உள்ள அரசு மதுபான கடையில் 250 ரூபாய் மதிப்புள்ள 180 மில்லி அளவு கொண்ட குவாட்டர் பாட்டிலை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வாங்க முற்பட்டார்.
அப்போது கடை ஊழியர்கள் கூடுதலாக 10 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என நிர்ப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக 10 ரூபாய் பணம் செலுத்தி வாங்கியுள்ளார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்த கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தங்கவேல் புகார் மனு கொடுத்தார்.
அப்போது, இதுபோன்று வசூல் செய்வதால் மதுவை குடிப்பதை நோக்கமாக குடிப்பவர்கள் நிலை என்னவாகும் என்பதை எண்ணி ஒட்டுமொத்த மது குடிப்பவர்கள் நலனுக்காக மனு கொடுத்ததாக கூறினார். மேலும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்ட போது கூடுதலாக மதுவுக்கு பணம் பெறப்பட மாட்டாது என துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த உத்தரவு என்னவாயிற்று என கேள்வி எழுப்பினார்.
இதனால் அரசு மதுபான கடையில் மது குடிப்பவர்கள் நலன் கருதி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu