ஜெயலலிதா பிறந்தநாள் விழா: ஈரோடு பெரியார் நகரில் பெண்களுக்கு கோலப்போட்டி

ஜெயலலிதா பிறந்தநாள் விழா: ஈரோடு பெரியார் நகரில் பெண்களுக்கு கோலப்போட்டி
X

கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை  ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ராமலிங்கம் வழங்கினார்.

ஈரோடு பெரியார் நகரில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஈரோடு பெரியார் நகரில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா ஈரோடு பெரியார் நகரில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியார் நகர் முழுவதும் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகிய படங்களுடன் கூடிய சுமார் 100க்கு மேற்பட்ட கோலங்கள் போடப்பட்டு அதில் அம்மா வாழ்க என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (இன்று) பெரியார் நகரில் நடந்தது. இதில் முதல் பரிசாக ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளும், இரண்டாம் பரிசாக ரூ 2 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளும், மூன்றாம் பரிசாக ரூ.1,500 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளும், 4ம் பரிசாக ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளும் மற்றும் ஆறுதல் பரிசாக 100 பேருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பெரியார் நகர் பகுதி அதிமுக செயலாளர் மனோகரன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக, ஈரோடு பெரியார் நகரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏக்கள் தென்னரசு, பால கிருஷ்ணன், முன்னாள் எம்பி செல்வகுமார சின்னையன், முன்னாள் அமைச்சர் ராமசாமி, தனியார் மின்வாரிய அமைப்பு தலைவர் மின் மணி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு முன்னாள் செயலாளர் கிஷோர் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!