அலங்கார ஊர்திக்கு மறுப்பு: பவானியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

அலங்கார ஊர்திக்கு மறுப்பு: பவானியில்  இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர். 

பவானியில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி, டெல்லியில் வரும் 26-ந்தேதி குடியரசு தின விழாவில் நடக்கும் ஊர்வலத்தில், தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு, முதல்வர் ஸ்டாலின் உள்பட, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அவ்வகையில், இன்று காலை 11 மணியளவில், பவானி அந்தியூர் - மேட்டூர் பிரிவில், சிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன் தலைமை வகித்தார். சிபிஐ வடக்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மோகன், சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் சங்க மாநில நிர்வாகி ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், வழக்கறிஞர் சிவராமன், மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், நகர தலைவர் முகமது அலி , நகர செய்லாளர் தாமோதரன்,சிபிஐ நகரக்குழு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், மணி, விஸ்வநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட திரளாக கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

Tags

Next Story