கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை
X

பாண்டியன்.

கோபிசெட்டிபாளையம் அருகே உடல் நலக்குறைவு காரணமாக, வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 78). கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாய்மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவலறிந்து வந்த கோபி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி போராடி உடலை மீட்டனர். மேலும், இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு