கோபிசெட்டிபாளையம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

கோபிசெட்டிபாளையம் அருகே தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் வரப்பாளையத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி தவமணி. இவர்களது மகள் கோதைநாயகி என்கிற விவிதா (வயது 20). இவர் கோபி கரட்டடிபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 3ம் ஆண்டு படித்து வந்தார். தந்தை பச்சையப்பன் சாலை விபத்தில் உடல் நலம் பாதித்து இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அவருக்கும் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், மனவேதனையில் இருந்த கோதைநாயகி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குளியலறையில் தூக்கிட்டு கொண்டார். உடனே அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!