ஈரோடு மாவட்டத்தில் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய கலெக்டர் வேண்டுகோள்

ஈரோடு மாவட்டத்தில் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய கலெக்டர் வேண்டுகோள்
X

ஈரோடு மாவட்ட ஆட்சியரகம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் மகளிர் விடுதிகளை 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு நிறுவனங்கள் நடத்தும் மகளிர் விடுதிகள், கல்லூரி மாணவி விடுதிகள், அரசு சாரா நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், ஜவுளிக்கடைகள், அறக்கட்டளைகள். சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள். தனி நபரால் நடத்தப்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் தற்காலிகமாக நடத்தப்படும் விடுதிகள் வரும் 31ம் தேதிக்குள் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு https://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து, அதன் நகல் இரண்டினை இணைத்து உரிய ஆவணங்களுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 6வது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால், விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது