ஈரோடு மாவட்டத்தில் 39 புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க ஆணை: ஆட்சியர் வழங்கினார்!

ஈரோடு மாவட்டத்தில் 39 புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க ஆணை: ஆட்சியர் வழங்கினார்!
X
ஈரோடு மாவட்டத்தில் 39 புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்குவதற்கான ஆணைகளை ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 18) வழங்கினாா்.

ஈரோடு மாவட்டத்தில் 39 புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்குவதற்கான ஆணைகளை ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 18) வழங்கினாா்.

தமிழகத்தில் பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர புதிய மினி பேருந்து திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 65 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டது.

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 15ம் தேதி வரை பெறப்பட்டது. இதில் 39 வழித்தடங்களுக்கு 88 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 25 வழித்தடங்களுக்கு ஒரு விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டது. 14 வழித்தடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் குலுக்கல் நடத்தப்பட்டு 14 விண்ணப்பதார்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்கள் பேருந்துகளை தயாா் செய்யவும் மற்றும் இதர ஆவணங்களை சமா்ப்பிக்கவும் 39 விண்ணப்பதாரா்களுக்கு அடுத்தக் கட்ட பணிகள் மேற்கொள்ள செயல்முறை ஆணையினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

இந்நிகழ்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ம.பதுவைநாதன் (ஈரோடு (மேற்கு), மு.மாதவன் (பெருந்துறை), கோ.மோகனப்பிரியா (கோபிசெட்டிபாளையம்) உட்பட கோட்ட மேலாளர், தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ஈரோடு மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
Similar Posts
தாளவாடி வட்டத்தில் நாளை (மார்ச் 19) நடைபெற இருந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தேதி மாற்றம்
ஈரோட்டில் அகில இந்திய ரயில் ஓட்டுநர் சங்கம் சார்பில் கருத்தரங்கம்
ஈரோடு மாவட்டத்தில் 39 புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க ஆணை: ஆட்சியர் வழங்கினார்!
ஈரோட்டில் உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரம் கொள்ளை
சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு விழா குழுவினர் மனு
கோடை வெயிலின் விளைவாக ஏரிகள் மேய்ச்சல் நிலங்களாக மாறுவதற்கு காரணம்
வரி கட்டாததால் குடிநீர் இணைப்பு கட்
வாக்காளர் அட்டையை ஒப்படைத்து மக்கள் போராட்டம்
மரவபாளையத்தில் மின்கம்பங்களை மாற்றக் கோரி மக்கள் போராட்டம்
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம்
அண்ணாமலை கைது: பா.ஜ., சார்பில் மாநிலம் முழுவதும் அதிரடி ஆர்ப்பாட்டம்
காலாவதி குளிர்பானம் விற்பனை, 12 கடைகளுக்கு அபராதம்