பெருந்துறை பேருந்து நிலையத்தில் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்த கலெக்டர்

பெருந்துறை பேருந்து நிலையத்தில்   புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்த கலெக்டர்
X

சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திறந்து வைத்து பார்வையிட்ட போது எடுத்த படம்

பெருந்துறை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட, புகைப்படக் கண்காட்சியினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்த புதிய திட்டப்பணிகள் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாள் முதல் மேற்கொள்ளப்பட்ட அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்வுகள் போன்ற அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதுவரை புகைப்படக்கண்காட்சியினை சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்த்து பயன்பெற்றனர். பின்னர் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய் தொற்று விழிப்புணர்வு குறித்த அரசின் செய்தி மலர் குறும்படம் திரையிடப்பட்டதையும் பார்வையிட்டனர். இக்கண்காட்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், பெருந்துறை பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!