பெருந்துறை அருகே நாற்றுப்பண்ணையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
துடுப்பதி ஊராட்சியில், நாற்றுப்பண்ணை அமைக்கும் பணி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சுள்ளிபாளையம் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.3.65 இலட்சம் மதிப்பீட்டில் நாற்றுப்பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட 16 இடங்களில் சுமார் ரூ.91.00 இலட்சம் மதிப்பீட்டில் 2,35,000 அளவிலான நாற்றுகள் அமைக்கப்படவுள்ளது. மேலும் இதில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.64.95 இலட்சம் மதிப்பீட்டில் 16,875 மரக்கன்றுகளும் நடப்படவுள்ளது என்றார். என
தொடர்ந்து, துடுப்பதி ஊராட்சி துடுப்பதியில், தூய்மை பாரத இயக்கம் சார்பில் ரூ.22.10 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அளவிலான குப்பைகளை தரம் பிரிப்பதற்கான சிறிய அளவிலான இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தினையும், சீனாபுரம் ஊராட்சி அண்ணாநகர்பகுதியில் பாரத பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுள்ள வீடுகளையும், சீனாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செயல்பட்டு வரும், சத்துணவு மையத்தினையும் பார்வையிட்டார்.
குள்ளம்பாளையத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையினையும், வி.மேட்டுப்பாளையம் பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.6.79 இலட்சம் மதிப்பீட்டில் 68 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணியினையும், அதே பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வரும் வட்டார ஊராட்சி தகவல் மையத்தினையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்படும் வட்டார அளவிலான மையத்தினையும் மற்றும் சீலம்பட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, பெருந்துறை வட்டாட்சியர், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu