ஈரோடு: மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

ஈரோடு: மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி
X

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டியினை ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து துவக்கி வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு வ.உ.சி.பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டி நடந்தது.

ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டி, இன்று நடந்தது. ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி போட்டியை துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.


இதில், 100 மீட்டர், 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி, நின்ற நிலை தாண்டுதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடந்தன.இப்போட்டிகளில், மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் , 300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஸ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி உள்ளிட்டோர் கண்காணித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture