ஈரோடு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!

ஈரோடு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
X
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டத்தில், துறைச் சாந்த உயர் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டத்தில், துறைச் சாந்த உயர் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நேற்று (ஏப்ரல் 7ம் தேதி) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சத்தியமங்கலம், அந்தியூர், தாளவாடி ஒன்றியங்களுக்குட்பட்ட மலைகிராமங்களில் சாலை வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு சாலைவசதி மேற்கொள்ளுதல், மின்கம்பங்கள் மாற்றி அமைத்தல், சுகாதாரத்துறையின் சார்பில் புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைத்தல் குறித்தும் அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பிறப்பு, இறப்பு பதிவில் தாய் மற்றும் தந்தையின் ஆதார் விபரங்களை மென்பொருளி இணைத்திடும் பணிகளின் முன்னேற்றம், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பேருந்து வசதி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் வாணிப்புத்தூர் பகுதியில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைத்தல், சத்தியமங்கலம் வட்டாரம் மாநில அரசு விதைப்பண்ணைக்கு முள்வேலி அமைத்தல் குறித்தும் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, பள்ளிகளுக்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், அரசு பள்ளிகளில் கழிப்பறை கட்டும் பணிகள், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை பேருந்து வழித்தடம் நீட்டிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைககள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு விரிவாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அர்பித் ஜெயின், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு (ஈரோடு), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹம்மது குதுரத்துல்லா உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story