கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணையை ஆட்சியர் நேரில் ஆய்வு

கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணையை ஆட்சியர் நேரில் ஆய்வு
X

குண்டேரிப்பள்ளம் அணையினை ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையினை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி‌.என்.பாளையம் அருகே உள்ள குன்றி மலை அடிவாரத்தில் கடந்த 1980ஆம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணையானது கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் வாணிபுத்தூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனையடுத்து, குண்டேரிப்பள்ளம் அணையினை ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அணையின் நீர் கொள்ளளவு, நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அணைப்பகுதியில் பூங்கா அமைத்து பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது கோபி தாசில்தார் தியாகராஜன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவிப் பொறியாளர் கல்பனா ஆகியோர் உடன் இருந்தார்கள்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி