ஈரோடு மாவட்டத்தில் 9 பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டமாக சரிபார்ப்பு: ஆட்சியர் ஆய்வு!

ஈரோடு மாவட்டத்தில் 9 பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டமாக சரிபார்ப்பு: ஆட்சியர் ஆய்வு!
X
ஈரோடு மாவட்டத்தில் 9 பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றதை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பேரூராட்சி 17-வது வார்டு, பவானிசாகர் பேரூராட்சி 11-வது வார்டு, சென்னசமுத்திரம் பேரூராட்சி 7-வது வார்டு, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி 2-வது வார்டு. கிளாம்பாடி பேரூராட்சி 10-வது வார்டு, கூகலூர் பேரூராட்சி 3-வது. 5-வது வார்டுகள், பள்ளபாளையம் பேரூராட்சி 11-வது வார்டு, வாணிபுத்தூர் பேரூராட்சி 4-வது வார்டு ஆகிய 9 கவுன்சிலர்களின் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடந்த 2 நாட்களாக நடந்து வந்தது. இந்த பணியை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜ், பெல் நிறுவன பொறியாளர்கள் உட்பட தொடர்புடைய துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story