ஈரோடு மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் இலவச தடுப்பூசி பணி: ஆட்சியர் தகவல்
ஆடுகளுக்கு தடுப்பூசி (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ஆட்டுக்கொல்லி நோய் இலவச தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயில் இருந்து பாதுகாத்திட, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சினையுற்ற ஆடுகள் தவிர 4 மாத வயதிற்கு மேல் உள்ள அனைத்து ஆடுகளுக்கும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆடுகள் வளர்ப்பில், ஆட்டுக்கொல்லி நோய் என்பது விவசாயிகளுக்கு, பெரும் சவாலாக உள்ளது. பொதுவாக, இந்நோய் தாக்கி, ஆடுகள் இறப்பதால் கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இந்நோயால், ஆடுகள் இறப்பினை தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் வருடத்திற்கு ஒருமுறை இலவசமாக அனைத்து வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு போடப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள், குக்கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு, அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இத்தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி தங்களது ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஆட்டுக்கொல்லி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு, நாமக்கல் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள். நமது குழுவில் இணையுங்கள். Click Now
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu